Pages

Wednesday, September 23, 2015

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே! தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே! இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ? (மயங்கினேன்) உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்? வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ துன்பக் கவிதையோ கதையோ? இரு கண்ணும் உன் நெஞ்சும் இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ? (மயங்கினேன்) ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும் உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும் மாலைமங்களம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ? மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ? ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் உந்தன் உறவுதான் உறவு! அந்தநாளை எண்ணி நானும் அந்தநாளை எண்ணி நானும் வாடினேன் (மயங்கினேன்)



No comments:

Post a Comment