வீடியோ: லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் இதயங்களை கவர்ந்த போக்குவரத்து காவலர்
சென்னைக்கு அருகாமையில் உள்ள சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றிவரும் குமார் என்பவர் தனது கடமை உணர்வு, சோர்வில்லா உழைப்பு மற்றும் நடன முத்திரை போன்ற உடல் அசைவுகளால் சாலையில் செல்லும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் இதயங்களை
கவர்ந்துள்ளார்.
சென்னை:
சென்னைக்கு அருகாமையில் உள்ள சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றிவரும் குமார் என்பவர் தனது கடமை உணர்வு, சோர்வில்லா உழைப்பு மற்றும் நடன முத்திரை போன்ற உடல் அசைவுகளால் சாலையில் செல்லும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் இதயங்களை கவர்ந்துள்ளார்.
சென்னைக்கு அருகாமையில் உள்ள சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றிவரும் குமார் என்பவர் அன்றாடம் பணிக்கு கிளம்பும்போது தன்னை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தங்களது நாளை தொடங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடனும் கடமையாற்ற செல்கிறார்.
ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் இவர், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் சற்றும் சோர்வின்றி இன்முகத்துடன் தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த கடமையின்போது தன்னை வாகன ஓட்டிகளுக்கான ஒரு ஆசிரியராக கருதிக்கொள்வதாக கூறும் இவர், கைகளை நடன முத்திரைகளைபோல் ஆட்டியும், வேகமாக விசில் அடித்தும், உடலை வளைத்து, நெளித்தும் சாலைகளில் செல்லும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
தன்னை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகன ஓட்டிகளையும் தனது வாடிக்கையாளராக கருதுவதாக கூறும் குமார், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். முதியவர்கள் சாலையை கடக்க உதவுவதுடன், தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தும் அவர்களின் தாகத்தை தணிக்கிறார்.
கண்ணுக்கு தென்படும் மனிதர்களிடத்தில் அன்பு செலுத்தாத யாரும், கண்களுக்கு புலப்படாத கடவுளிடத்தில் எப்படி அன்பு செலுத்த முடியும்? என்று கேட்கும் போக்குவரத்து காவலர் குமாரின் கடமை உணர்வும், கனிவான பேச்சும், களைப்பின்றி, உற்சாகத்துடன் பணியாற்றும் பாணியும் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.
இவரைப்பற்றிய வீடியோ பதிவு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவானதும் பல லட்சம் பேர் பார்த்து வியந்து, லைக் அடித்து, ஷேர் செய்து வருகின்றனர்.
நான் போலீஸ் வேலையில் சேர்ந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுநாள்வரை நான் பணியில் இருந்த பகுதிகளின் வழியாக சென்ற வாகனங்களில் ஒன்றுகூட விபத்தில் சிக்கியது கிடையாது. என்னை கடந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் அனைவரும் மாலையில் பத்திரமாக வீடுபோய் சேர்ந்தார்கள் என்ற மனநிறைவுடனும், நிம்மதியுடனும் என்னுடையை ஒவ்வொரு நாளும் கழிகிறது என்றுகூறும் ’கடமைவீரர்’ குமாருக்கு ஒரு ‘லைக்’ போடலாமே..!
வீடியோவுக்கு.
No comments:
Post a Comment