Tuesday, August 4, 2015

 

வருமான சான்று பெற அலைய வேண்டாம்ஆகஸ்ட் 04,2015,10:14 IST

எழுத்தின் அளவு :
சென்னை: சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகை பெற,வருமானச் சான்றிதழில் பெற்றோரே கையெழுத்திட்டு அளித்தால் போதும் எனபள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக அரசுஅரசு உதவிபெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், 1ம் வகுப்பு முதல்பிளஸ் 2, உயர் கல்வியில் ஆராய்ச்சி படிப்பு வரையிலும்தொழில் படிப்புதொழில்நுட்பப் படிப்பு படிக்கசிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கிறிஸ்தவஇஸ்லாமியபுத்தசீக்கியபார்சி மற்றும் ஜெயின் வகுப்பினருக்குஇந்த உதவித்தொகை கிடைக்கும்.உதவித்தொகை பெறமாணவரின் பெற்றோருக்கு குறிப்பிட்ட வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான சான்றிதழைவருவாய் துறை அதிகாரிகளிடம் பெற்றுபள்ளிகளில் வழங்க வேண்டும். ஆனால்இந்த ஆண்டுபெற்றோர் அல்லது பாதுகாவலர்தாங்களே சுய கையொப்பமிட்டு வருமானச் சான்றிதழை அளித்தாலே போதும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவேவருமான வரிச் சான்றிதழைவருவாய் துறையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என,தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளதாகபள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்மாணவர் தங்களின் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலைசுய கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலே போதும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment