‘கற்கை நன்றே... கற்கை நன்றே.. பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பது ஆன்றோர் வாக்கு. கல்வியின் சிறப்பை உணர்த்தும் இவ்வரிகளுக்கு ஏற்ப, கல்வி கற்க பெரும் போராட்டம் நடத்தி வருகிறார், மாணவர் சக்தி மணிகண்டன்,18.
கமுதி அருகே உள்ள மருதங்கநல்லூரை சேர்ந்த இவர், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம்., (சிஏ) இரண்டாமாண்டு படித்து வருகிறார். உடன் பிறந்த 2 சகோதரிகள். விடுமுறை நாட்களில் கட்டடப்பணி, விவசாய வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது கல்லூரி படிப்பை தொடர் கிறார், சக்தி மணிகண்டன்.
ஒரு நாளைக்கு மருந்தங்க நல்லூரி லிருந்து அருப்புக்கோட்டை கல்லூரிக்கு, பஸ்சில் செல்ல ரூ.50 செல வழித்து வருகிறார். தனது அம்மாவுடன், சகோதரிகளும் விவசாய கூலி வேலை, நுõறு நாள் வேலைத்திட்டத்தில் கிடைக்கும் வருவாயால் மட்டுமே சக்தி மணிகண்டனின் குடும்பம் வாழ்ந்து வருகிறது.
சக்திமணிகண்டன் கூறுகையில்,
“கோடை விடுமுறையில் கட்டுமானம், விவசாயம், ரோடு பணிகள் உட்பட எந்த பணியாக இருந்தாலும் ஆர்வமாக செய்து, கிடைக்கும் பணத்தை கொண்டு, கல்லூரி கட்டணத்தை செலுத்தி வருகிறேன்.
சக்திமணிகண்டன் கூறுகையில்,
“கோடை விடுமுறையில் கட்டுமானம், விவசாயம், ரோடு பணிகள் உட்பட எந்த பணியாக இருந்தாலும் ஆர்வமாக செய்து, கிடைக்கும் பணத்தை கொண்டு, கல்லூரி கட்டணத்தை செலுத்தி வருகிறேன்.
அப்பா முருகேசன் வெளி நாட்டில் இருந்தாலும், அங்கு செல்வதற்கு வாங்கிய கடனை அடைக்கவே அவரது சம்பளம் சரியாக உள்ளது. கிடைக்கும் வேலையை செய்து படிப்பு முடிந்ததும், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து, எனது பெற்றோரை மகிழ்ச்சியில் வைத்திருப்பதே எனது லட்சியம்,” என்றார். இவருக்கு உதவ நினைக்கும் உள்ளங்கள் 88701 52671 ல் ‘ஹாய்’ சொல்லுங்களேன்.
No comments:
Post a Comment