Friday, July 31, 2015
மதுவிலக்கு போராளி காந்தியவாதி சசிபெருமாள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தனது போராட்டத்தின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உண்ணாமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தார். இப்போராட்டத்தில் மதுவிலக்கு போராளி சசிபெருமாளும் கலந்து கொள்வார் எனக் கூறியிருந்தார்.
அதன்படி சசிபெருமாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உண்ணாமலை பகுதிக்கு வந்தர். அப்போது அவரும், ஜெயசீலனும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயசீலன் பாஜகவைச் சேர்ந்தவர். அவர் செல்போன் கோபுரத்தின் பாதி வழியில் அமர்ந்து கொண்டார். சசி பெருமாள் கோபுரத்தின் உச்சிப் பகுதிக்கே ஏறிவிட்டார்.
தகவலறிந்து, சுமார் 8.30 மணியளவில், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் முத்து, தக்கலே டிஎஸ்பி விக்ராந்த் பாட்டீல், வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தடைந்தனர். ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் வரவிலை.
சசிபெருமாள் போராட்டத்தை துவங்கி 5 மணி நேரத்துக்குப் பின்னர் டாஸ்மாக் உயரதிகாரி அங்கு வந்துள்ளார். டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் உண்ணாமலை பகுதியில் இருந்து ஏற்கெனவே கடையை அகற்றுவதாக எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது என்றனர். உண்ணாமலை பகுதியில் இருந்து டாஸ்மாக் கடை மூடப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளனர்.
அதன்பின்னர் செல்போன் கோபுரத்திலிருந்து அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன.
மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சசிபெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சசிபெருமாள் திடீர் மரணத்துக்கு அவரது ரத்த அழுத்தம் அதிகரித்ததுகூட காரணமாக இருக்கலாம். இருப்பினும், உறுதியான தகவல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியும் என மருத்துவர்கள் கூறினர்.
சசிபெருமாள் மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். கடந்த 2014 ஆண்டு அவர் தொடர்ந்து 34 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பூரண மதுவிலக்கு கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டம் நடத்தியிருக்கிறார்.
சுளீர் கருத்து:
சில மாதங்களுக்கு முன்பு 'தி இந்து'வுக்கு சசிபெருமாள் அளித்த பேட்டி ஒன்றில் பூரண மதுவிலக்கு குறித்து சுருக்கமாக கூறியது, அவரது நோக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தும். அதன் முக்கிய அம்சம் இதுதான்:
"சரித்திரப் பெருமை வாய்ந்த தமிழகத்தை, 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சாராய முதலாளிகள் ஆண்டு வருகிறார்கள். அப்படி ஒரு கரும்புள்ளி வரலாறாக, தமிழகத்தை மாற்றிவிட்டார்கள். சாராய சாம்ராஜ்யத்தை நடத்த, சட்டமன்றத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அடுத்தவர் காய்ச்சினால் கள்ளச்சாராயம்; அரசே காய்ச்சினால் நல்ல சாராயம் என்று விற்கிறார்கள். இதனால், இலங்கையில் இனப் படுகொலை நடந்ததுபோல், தினமும் தமிழகத்தில் சாராயப் படுகொலைகள் நடந்து வருகின்றன. சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு மக்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைவரும் போராட களம் இறங்கியுள்ளார்கள். இது 2-வது சுதந்திரப் போராட்டமாக மாறியுள்ளது."
தலைவர்கள் இரங்கல்:
சசிபெருமாள் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறும்போது, "சசிபெருமாள் இறப்பு அதிச்சியளிக்கிறது. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றார்.
சசிபெருமாள் போராட்டக் களத்திலேயே உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தாமதிக்காமல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நண்பர் வேதனை:
சசிபெருமாளின் நண்பர் சசிதரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வந்தார். உண்ணாமலை பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். காலை முதலே கடும் வெயில் அடித்து வந்தது. அதையும் பொருட்படுத்தாது அவர் உற்சாகத்துடன் போராடினார். ஆனால், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.
சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கருத்து:
மதுவிலக்கு கோரி போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கூறும்போது, "சசிபெருமாள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சசிபெருமாள் நீண்ட நாட்களாக மதுவிலக்கு கோரி போராடி வருகிறார். உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார். அண்மைகாலமாக செல்போன் கோபுரங்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார். அவர் தொட்ர்ச்சியாக போராடியும்கூட அரசு அவரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அரசு, ஒரு போராளியின் உயிரை துச்சமாக நினைத்ததாலேயே இந்த அவலம் நடந்துள்ளது" எனக் கூறினார்.
சசிபெருமாள் இறப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்
சசி பெருமாளின் இறப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடை என்ற இடத்தில் பள்ளி, கோயில்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்பிறகும் மதுக்கடை அகற்றப்படாததைக் கண்டித்து தான் அவர் செல்பேசி கோபுரத்தில் ஏறி இன்று போராட்டம் நடத்தினார்.
அவரது கோரிக்கையை ஏற்று ஒரே ஒரு மதுக்கடையை அகற்றியிருந்தால் மது ஒழிப்புக்காக போராடி வரும் அவரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட தமிழக அரசு மனசாட்சியின்றி நடந்து கொண்டதன் விளைவாக சசி பெருமாளை நாம் இழந்து நிற்கிறோம். சசி பெருமாளின் இறப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
சசி பெருமாளின் மறைவு மது ஒழிப்பு போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சசிபெருமாளின் விருப்பப்படி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி: சசிபெருமாள் உயரிழப்பு குறித்து தற்கொலை என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுவதாக கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி இன்று (31ஆம் தேதி) அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தியபோது திடீரென மரணம் அடைந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி மவாட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''சசிபெருமாளிடம் 7 நாளில் மதுபானக் கடையை மூடுவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இன்றே மூடவேண்டும் எனக் கூறி செல்போன் டவர் மீது ஏறினார். அப்போது அவரை தடுப்பதற்காக காவலர்கள் சென்றனர். ஆனால், அங்கிருந்த மக்கள் காவலர்களை தடுத்ததால், சசிபெருமாள் டவர் மீது ஏறியதை தடுக்க இயலவில்லை. தனது உடலில் கயிறு கட்டிக்கொண்டு, சசிபெருமாள் போராட்டம் நடத்தியதால் அவர் இறந்திருக்கலாம். தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும், அவரது உடல் பரிசோதனை முடிந்ததும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
கன்னியாகுமரி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசி பெருமாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது அவர், திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர். இதனால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். ஆனால், அதிகாரிகள் அளித்த உறுதிமொழிபடி டாஸ்மாக் கடை
மது ஒழிப்புக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் திடீர் மரணம்!
By Vikatan, 31 Jul 2015 02:15 PM
அகற்றப்படவில்லை. தொடர்ந்து டாஸ்மாக் கடையை தமிழக அரசு நடத்தி வந்தது. இதனிடையே, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊர்மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் டாஸ்மாக் கடையை தமிழக அரசு அகற்றவில்லை. இதனால் மீண்டும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். அப்போது, ஜூலை 31ஆம் தேதிக்குகள் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால், 31ஆம் தேதியான இன்று டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஊர்மக்கள் இன்று போராட்டத்தில் குவித்தனர். அப்போது, மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2013ஆம் ஆண்டில், 34 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. -த.ராம் மதுவிலக்கை ஆதரித்து உங்கள் குரலை வாக்காக பதிவு செய்யுங்கள் .. http://bit.ly/1gsKqKe மது ஒழிப்புக்கு குரல் கொடுத்து வந்த சசிபெருமாள் இறந்துள்ள நிலையில் மதுவுக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை வாக்காக பதிவு செய்ய க்ளிக் செய்க http://bit.ly/1gsKqKe
உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம்
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தினார். டாஸ்மாக் கடையை அடைக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார். செல்போன் டவரில் ஏறி சுமார் 5 மணிநேரம் போராட்டம் நடத்தி உள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. அவரை மீட்டு தீயணைப்பு துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
அவருடைய உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், சசிபெருமாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூரண மது விலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் சசிபெருமாள் ஆவார், அவர் டெல்லியிலும் போராட்டம் நடத்தி உள்ளார். 2013-ம் ஆண்டு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் உண்ணவிரத போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, July 30, 2015
ஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள்
Want to Study in Aus? - Meet Top Australian Universities in Your City. Attend Aus Edu Fair! idp.com/India
அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன.
அப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடை அணிந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'நல்ல நிறம்' என அவரது ஆடையைச் சுட்டிக்காட்டிச் சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நிறமென்று.
பருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வைப் புரிந்து கொண்ட கலாம், என் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கு மேல் இருக்கும் திரையை இழுத்துவிட்டு "இப்போது நீ அச்சமின்றி இருக்கலாம்" என்றார்.
விமானப் பயணம் ஒருவழியாக முடிந்தது. அடுத்ததாக ஐ.ஐ.எம். ஷில்லாங்குக்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப் பயணம். விமானப் பயணம், கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கிவிட்டது. ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம், விவாதித்தோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது.
இருப்பினும் எனக்கும் கலாமுக்கும் இடையேயான அந்த கடைசி பேச்சுகளில் மூன்று முக்கிய நிகழ்வுகள்/ஆலோசனைகள் எப்போதும் நினைவில் நிற்கும்.
முதலாவது, பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் கலாமை வெகுவாகவே பாதித்திருந்தது. அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ.ஐ.எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு 'வாழ்வதற்கு உகந்த பூமி'.
பஞ்சாப் சம்பவத்தையும் அவர் பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம், "மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்த புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி வருகின்றன. வன்முறையும், சுற்றுச்சூழல் மாசும், சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். எதிர்காலம் உங்கள் கைகளிலேயே இருக்கிறது" என்றார்.
இரண்டாவதாக நாங்கள் பேசிக் கொண்டது தேசிய அரசியல் பற்றியது. நாடாளுமன்றம் முடங்கி வருவது குறித்து கலாம் மிகுந்த வேதனை தெரிவித்தார். "எனது பதவிக் காலத்தில் நான் இரு வேறு அரசுகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் நிறைய ஆட்சி மாற்றங்களை பார்த்துவிட்டேன். ஆனால், இத்தகைய முடக்கங்கள் மட்டும் மாறவில்லை. இது சரியானது அல்ல. நாடாளுமன்றம் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஏதாவது ஒரு வழிவகை காண விரும்புகிறேன்" எனக் கூறினார்.
பின்னர் என்னிடம் ஐஐஎம் மாணவர்களிடம் கேட்பதற்காக சில கேள்விகளை தயார் செய்யுமாறு வலியுறுத்தினார். அதை தனது உரை முடிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமானதாகவும், துடிப்பு மிக்கதாகவும் மாற்றக்கூடிய வழிமுறைகள் மூன்றினை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். அதுவே கலாம் மாணவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த அந்த கடைசி நேரக் கேள்வி.
சிறிது நேரம் கழித்து என்னிடம் அந்த கேள்வி பற்றி மீண்டும் பேசினார். என்னாலேயே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் மாணவர்களால் எப்படி முடியும் என்றார். அடுத்த ஒரு மணி நேரம் இதைப் பற்றியே எங்கள் பேச்சு இருந்தது. பல்வேறு யோசனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களது அடுத்த படைப்பான 'அட்வான்டேஜ் இந்தியா' என்ற புத்தகத்தில் இது குறித்து சேர்க்கலாம் என முடிவு செய்தோம்.
மூன்றாவது நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிகரமானது. அவரது பண்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். எங்கள் வாகனத்துக்குப் பாதுகாப்பாக 6 வாகனங்கள் வந்தன. நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம். எங்கள் காருக்கு முன்னதாகச் சென்ற ஒரு திறந்த ஜிப்ஸி வாகனத்தில் 3 வீரர்கள் இருந்தனர். இருவர் ஜிப்ஸிக்குள் அமர்ந்திருந்தனர். ஒருவர் வாகனத்தில் நின்றபடி பயணித்தார். ஒரு மணி நேர பயணம் ஆகியிருக்கும், "அந்த நபர் ஏன் நின்று கொண்டே வருகிறார்? அவர் சோர்ந்து விடுவார். இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது? ஏதாவது செய்யுங்கள். ஒயர்லெஸ் கருவியில் தகவல் அனுப்பி அவரை அமரச் செய்யுங்கள் அல்லது கை அசைத்தாவது அவரை உட்கார சொல்லுங்கள்" எனக் கலாம் என்னிடம் கூறினார்.
அவரிடம் நான் எவ்வளவோ எடுத்துரைத்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கும்படி மேலதிகாரி கூறியிருக்கலாம் என்றேன். ஆனால், கலாம் சமாதானம் அடையவில்லை. ரேடியோ கருவி மூலம் தகவல் அனுப்ப எவ்வளவோ முயன்றோம். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. அடுத்த 1.5 மணி நேரப் பயணத்தின் போது "ஷில்லாங் சென்றதும் அந்த நபருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்" என்பதை அவர் என்னிடம் மூன்று முறையாவது நினைவுபடுத்தியிருப்பார். அதேபோல் ஷில்லாங் சென்றதும், அந்த நபரை நான் ஒருவழியாக தேடிப்பிடித்தேன். அவரை கலாமிடம் அழைத்துச் சென்றேன்.
அந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம், "சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடுகிறாயா" எனக் கேட்டார். "எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்" என்றார். கலாமின் பண்பைக் கண்டு வியந்துபோன அந்த வீரர், "சார், உங்களுக்காக நான் 6 மணி நேரம்கூட நிற்பேன்" என்றார்.
அதன்பிறகு நாங்கள் கருத்தரங்கம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சென்றோம். அவர் எப்போதுமே குறித்து நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கையுடவர். மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என என்னிடம் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார்.
அங்கே, அவருக்காக ஒலிப்பெருக்கியைச் சரி செய்தேன். கருத்தரங்கு குறித்து சுருக்கமாக குறிப்பு வழங்கினேன். அப்போது அவர் என்னிடம், 'ஃபன்னி கை'- விளையாட்டுப் பையன் நீ!" என்றார். அவருடனான 6 ஆண்டுகளில் குறிப்பிட்ட இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்களை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒழுங்காக வேலை செய்தால், சிறு தவறு செய்திருந்தால், அவர் சொல்வதற்கு செவி சாய்க்க வேண்டுமென நினைத்தால், எனப் பல்வேறு தருணங்களில் கலாம் இந்த வார்த்தையை என்னிடம் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் கூறியதே கடைசியானது, இறுதியானது.
மேடையில் ஏறி இரண்டு நிமிடங்கள் பேசியிருப்பார். நான் அவருக்குப் பின் அமர்ந்திருந்தேன். 2 நிமிட பேச்சுக்குப் பின்னர் நீண்ட இடைவெளி. நான் அவரைப் பார்த்தேன். அவர் கீழே சரிந்தார். அவரை நாங்கள் தூக்கினோம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். என்ன முதலுதவியெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர். என் ஒரு கரத்தில் கலாமின் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தேன். பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசிப் பார்வையை என்றென்றைக்கும் மறக்க முடியாது.
அவரது கை எனது கையை இறுகப்பற்றியது; அவரது விரல்களை என் விரல்களோடு கோர்த்துக்கொண்டார். அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது. அவர் எதுவும் பேசவில்லை. வலியை சிறிதும் காட்டவில்லை. அவரது கண்களில் ஞான ஒளி வீசியது. அடுத்து 5 நிமிடங்களில் நாங்கள் மருத்துவமனையை அடைந்திருந்தோம். ஆனால், அப்போதே ஏவுகணை நாயகன் நம்மைவிட்டு பறந்திருந்தார். அவரது பாதம் தொட்டு வணங்கினேன். எனது மூத்த நண்பருக்கு, எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன். உங்கள் நினைவுகள் என்னைவிட்டு நீங்காது. அடுத்த பிறப்பில் சந்திப்போம்.
நினைவலைகளில் இருந்து இன்னும் கொஞ்சம்...
"நீ ஒரு இளைஞன். நீ எதற்காக அடுத்தவர்களால் நினைவுகூரப்பட வேண்டும் என நினைக்கிறாய்?" இக்கேள்வியை கலாம் என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந்திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டேன். "நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்.... இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?" என்றேன்.
பல்வேறு பதில்களை நானே அளித்திருந்ததால் அவர் எளிதில் சொல்லிவிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, "ஆசிரியராக இருந்ததற்காகவே நினைவுகூரப்பட விரும்புவேன்!" என்றார்.
நோவற்ற மரணம் வரம்!
சில வாரங்களுக்கு முன்னதாக நானும் கலாமும் அவரது பழைய நண்பர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பேச்சு, பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பேணுவது தொடர்பாக விரிந்தது. அப்போது கலாம், "பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் பெரியவர்கள் தங்கள் சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்தளிக்க மரணப்படுகையில் விழும் வரை காத்திருக்கக் கூடாது. அது குடும்பத் தகராறு ஏற்பட வழி செய்யும். அதேபோல் நோவற்ற மரணம் பெரிய வரம். ஒருவர் தன் பணியின்போதே மரித்துப்போவார் எனில் அது வரமே. இறுதி மூச்சு, இழுபறியின்றி பிரிய வேண்டும்" என்றார்.
அவரது வார்த்தைகளை இன்று நான் அசைபோடுகிறேன். அவரது இறுதிப்பயணம் அவர் விருப்பத்துக்கேற்ப கற்பிக்கும்போதே நிகழ்ந்திருக்கிறது. கடைசி நேரத்தில் அவர் படுக்கையில் துவண்டு கிடக்கவில்லை. கம்பீரமாக நின்றுகொண்டு, பணி செய்துகொண்டு, உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்தது எல்லாம் மக்களின் அன்பு மட்டுமே. இறுதிப் பயணத்திலும் அவர் ஒரு வெற்றியாளரே.
அவருடனான காலை சிற்றுண்டி, இரவு உணவு வேளைப் பொழுதுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அவருடைய எளிமை, ஆர்வம் போன்ற குணங்கள் என்னில் எப்போதும் நினைவலைகளாக வியாபித்திருக்கும். அவர் விட்டுச்சென்ற பாடங்கள் எத்தனையோ. ஆனால், இனி அவரிடம் கற்க முடியாது என்ற வேதனை என்னை அமிழ்த்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் எனக்கு கனவுகளைத் தந்தீர்கள். அந்தக் கனவுகள் சாதிக்க முடிந்த சாத்தியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீர்கள். உங்களை என்றும் மறவேன்.
கலாம் சென்றுவிட்டார் ஆனால் அவரது பணிகள் காலம் கடந்து வாழும்.
உங்களுக்கு நன்றிக் கடன்பட்ட மாணவன்,
ஸ்ரீஜன் பால் சிங் - அப்துல் கலாமின் ஆலோசகர்
*
தமிழில் - பாரதி ஆனந்த்
യാക്കൂബ് മേമനെ തൂക്കിലേറ്റി
LATEST NEWS
Jul 30, 2015
ന്യൂഡല്ഹി: മുംബൈ സ്ഫോടന പരമ്പരക്കേസിലെ പ്രതി യാക്കൂബ് മേമന്റെ വധശിക്ഷ നടപ്പാക്കി. പുലര്ച്ചെ 6.38ന് നാഗ്പുര് സെന്ട്രല് ജയിലിലാണ് തൂക്കിലേറ്റിയത്. നടപടിക്രമങ്ങള് പൂര്ത്തിയാക്കി 9.55 ന് മൃതദേഹം കര്ശന നിബന്ധനകളോടെ ബന്ധുക്കള്ക്ക് വിട്ടുകൊടുത്തു.
നീണ്ട ചര്ച്ചകള്ക്കൊടുവിലാണ് യാക്കൂബ് മേമന്റെ മൃതദേഹം വിട്ടുകൊടുക്കാന് സര്ക്കാര് തീരുമാനിച്ചത്. അനുവദിച്ച സമയത്തിനകം സംസ്കാര ചടങ്ങ് പൂര്ത്തിയാക്കണം, സ്മാരകം നിര്മ്മിക്കരുത്, ചടങ്ങിന്റേയോ മൃതദേഹത്തിന്റേയോ ചിത്രങ്ങളോ വീഡിയോയോ പുറത്തുവിടരുത് തുടങ്ങിയ കര്ശന നിബന്ധനകള് ബന്ധുക്കള് അംഗീകരിച്ചതോടെയാണ് മൃതദേഹം വിട്ടുനല്കാന് തീരുമാനമായത്.
ജയിലില് നിന്ന് ആംബുലന്സില് നാഗ്പുര് വിമാനത്താവളത്തിച്ച മൃതദേഹം എയര് ആംബുലന്സില് മുംബൈയിലെത്തിച്ചു. മധ്യ മുംബൈയിലെ താമസസ്ഥലത്ത് ബന്ധുക്കള്ക്ക് കാണാന് അവസരമൊരുക്കിയ ശേഷം ബാന്ദ്രയിലെ ഖബറുസ്താനില് മൃതദേഹം വൈകീട്ട് 5.15 ന് സംസ്കരിച്ചു.
21 വര്ഷം നീണ്ട നിയമ നടപടികള്ക്ക് ശേഷമാണ് മേമന്റെ വധശിക്ഷ നടപ്പാക്കിയത്. അതിരാവിലെ തന്നെ ശിക്ഷനടപ്പാക്കാനുള്ള നടപടികള് ആരംഭിച്ചു. യാക്കുബ് മേമനെ വിളിച്ചുണര്ത്തി ലഘുഭക്ഷണം നല്കിയെങ്കിലും അദ്ദേഹം കഴിച്ചില്ല. തുടര്ന്ന് പ്രാര്ത്ഥിക്കാന് അവസരം നല്കി. അരമണിക്കൂറോളം പ്രാര്ത്ഥിച്ചു. പുതിയ വസ്ത്രങ്ങള് ധരിച്ചാണ് തൂക്കുമരത്തിലേക്കെത്തിച്ചത്. 6.38 ന് മജിസ്ട്രേറ്റിന്റെ നിര്ദേശ പ്രകാരം മേമനെ തൂക്കിലേറ്റി. മുംബൈ ഭീകരാക്രമണക്കേസ് പ്രതി അജ്മല് അമീര് കസബിനെ തൂക്കിലേറ്റിയ ആരാച്ചാര് തന്നെയാണ് വധശിക്ഷ നടപ്പാക്കിയത്. 7.01ന് ഡോക്ടര് പരിശോധിച്ച് യാക്കൂബ് മരിച്ചുവെന്ന് ഉറപ്പുവരുത്തി.
അസാധാരണ നടപടിയിലൂടെ മേമന് വേണ്ടി സമര്പ്പിച്ച ഒടുവിലത്തെ ഹര്ജി സുപ്രീംകോടതി പുലര്ച്ചെ രണ്ടരയ്ക്ക് ചേര്ന്നാണ് വാദം കേട്ടത്. ഒടുവില് ഹര്ജി തള്ളിക്കളഞ്ഞ കോടതി വധശിക്ഷ മുന്നിശ്ചയ പ്രകാരം നടപ്പാക്കാന് ഉത്തരവിട്ടു. നാടകീയതകളും പിരിമുറുക്കവും നിറഞ്ഞ ഒരു പകലിനും രാത്രിക്കുമൊടുവിലാണ് ഇത് സംബന്ധിച്ച അനിശ്ചിതത്വം മാറി വിധി നടപ്പാക്കാനുള്ള തീര്പ്പുണ്ടായത്. തന്റെ 53 ാം പിറന്നാള് ദിനത്തില് തന്നെയാണ് താന് ചെയ്ത തെറ്റിന് അദ്ദേഹം തൂക്കിലേറ്റപ്പെടുന്നത്.
കോടതി ഉത്തരവിലെ ന്യൂനത ചൂണ്ടിക്കാട്ടി പ്രശാന്ത് ഭൂഷന്റെ നേതൃത്വത്തിലുള്ള അഭിഭാഷക സംഘം സുപ്രീംകോടതിയെ രാത്രിയില് സമീപിച്ചതോടെയാണ് അപ്രതീക്ഷിത വാദം കേള്ക്കലിന് വഴിതെളിഞ്ഞത്. രാഷ്ട്രപതി ദയാഹര്ജി തള്ളിയാല് ഏഴ് ദിവസത്തിന് ശേഷമേ വധശിക്ഷ നടപ്പാക്കാവൂ എന്ന മഹാരാഷ്ട്ര ജയില് മാനുവലിലെ ചട്ടം ചൂണ്ടിക്കാട്ടിയാണ് അഭിഭാഷകര് രാത്രിയില് ചീഫ് ജസ്റ്റിസ് എച്ച്.എല് ദത്തുവിനെ സമീപിച്ചത്. വ്യാഴാഴ്ച രാവിലെ ഏഴ് മണിക്ക് തന്നെ മേമന്റെ വധശിക്ഷ നടപ്പാക്കാനുള്ള എല്ലാ തയാറെടുപ്പുകളും നാഗ്പൂര് സെന്ട്രല് ജയിലില് പൂര്ത്തിയാക്കി അധികൃതര് കാത്തിരിക്കുമ്പോഴായിരുന്നു ഇത്.
ഉത്തരവിലെ പിഴവ് ആധാരമാക്കി അര്ധരാത്രിയില് ഹര്ജി വന്നതോടെ ചീഫ് ജസ്റ്റിസ് എച്ച്.എല് ദത്തു നേരത്തെ കേസ് പരിഗണിച്ച ജസ്റ്റിസുമാരായ ദീപക് മിശ്ര, പ്രഫുല്ല സി. പന്ത്, അമിതാവ റോയ് എന്നിവരടങ്ങിയ ബെഞ്ച് തന്നെ ഇതിലും അടിയന്തരമായി വാദം കേള്ക്കാന് നിര്ദേശിച്ചു. അതനുസരിച്ച് പുലര്ച്ചെ 2.30 ന് ജസ്റ്റിസ് ദീപക് മിശ്രയുടെ വസതിയില് കോടതി ചേരാന് തീരുമാനിച്ചു. എന്നാല് അവസാന നിമിഷം അത് മാറ്റി സുപ്രീംകോടതിയില് തന്നെ വാദം കേള്ക്കാന് തീരുമാനിച്ചു. നാലാം നമ്പര് കോടതിമുറിയിലാണ് പുലര്ച്ചെ ഈ നാടകീയതകള് നിറഞ്ഞ വാദവും മറുവാദവും നടന്നത്.
ജസ്റ്റിസുമാരായ ദീപക് മിശ്ര, പ്രഫുല്ല സി. പന്ത്, അമിതാവ റോയ് എന്നിവരടങ്ങിയ ഇതേ ബഞ്ച് തന്നെയാണ് വധശിക്ഷ നടപ്പാക്കുന്നത് നിര്ത്തിവെക്കണമെന്ന് ആവശ്യപ്പെട്ട് മേമന് നല്കിയ ഹര്ജി ബുധനാഴ്ച പകല് തള്ളിയത്. മണിക്കൂറുകള്ക്കുള്ളില് തന്നെ വീണ്ടും അതേ ബഞ്ച് ഒരിക്കല് കൂടി കേസ് കേട്ട് വിധി കല്പിച്ചു.
ബുധനാഴ്ച സുപ്രീംകോടതി ഹര്ജി തള്ളിയതിന് പിന്നാലെ ഗവര്ണര് രാഷ്ട്രപതിക്ക് മേമന് നല്കിയ രണ്ടാം ദയാഹര്ജിയും തള്ളി. രാത്രി പത്തേമുക്കാലോടെയാണ് ദയാഹര്ജി രാഷ്ട്രപതി തള്ളിയ തീരുമാനം വന്നത്. ഇതിനോടിടയ്ക്ക് ഗവര്ണര് വിദ്യാസാഗര് റാവുവും അദ്ദേഹത്തിന് മുമ്പാകെ സമര്പ്പിക്കപ്പെട്ട ദയാഹര്ജിയും തള്ളി. ദയാഹര്ജി നിലനില്ക്കില്ലെന്ന ആഭ്യന്തരമന്ത്രാലയത്തിന്റെ റിപ്പോര്ട്ട് പരിഗണിച്ചാണ് രാഷ്ട്രപതി മേമന്റ ദയാഹര്ജി തള്ളിയത്. അതോടെ മേമനെ നാഗ്പുര് ജയിലില് തൂക്കിലേറ്റാനുള്ള എല്ലാ നടപടികളും ജയില് അധികൃതര് പൂര്ത്തിയാക്കി. ഇതിനിടെയാണ് വീണ്ടും കാര്യങ്ങള് സുപ്രീംകോടതിക്ക് മുമ്പാകെ എത്തിയത്. രാഷ്ട്രപതിയുടെ തീരുമാനം വരുന്നതിന് മുമ്പ് തന്നെ മേമന്റെ അഭിഭാഷകര് ഉത്തരവിലെ ന്യൂനത ചൂണ്ടിക്കാട്ടി സുപ്രീംകോടതി ചീഫ് ജസ്റ്റിസിനെ സമീപിച്ചു.
രാത്രി വൈകി ആഭ്യന്തരമന്ത്രി രാജ്നാഥ് സിങ് രാഷ്ട്രപതിയുമായി കൂടിക്കാഴ്ച നടത്തി. മുംബൈ സ്ഫോടന കേസില് 22 കൊല്ലം നീണ്ട നിയമനടപടികള്ക്ക് ഇതോടെ തിരശ്ശീല വീഴുകയാണ്.
യാക്കൂബ് മേമന്റെ തിരുത്തല് ഹര്ജി തള്ളിയ ചീഫ് ജസ്റ്റിസ് എച്ച്. എല്. ദത്തു അധ്യക്ഷനായ മൂന്നംഗ ബെഞ്ചിന്റെ നടപടികള് സാധുവാണെന്നും കോടതി വിധിച്ചു. തിരുത്തല്ഹര്ജി പരിഗണിച്ചത് സുപ്രീം കോടതിയുടെ ചട്ടങ്ങള് പ്രകാരമല്ലെന്ന ജസ്റ്റിസ് കുര്യന് ജോസഫിന്റെ നിലപാട് മൂന്നംഗ ബെഞ്ച് അംഗീകരിച്ചില്ല. തിരുത്തല്ഹര്ജി പരിഗണിച്ച ബെഞ്ചിന്റെ രൂപവത്കരണത്തില് പാളിച്ചയുണ്ടായിട്ടില്ലെന്നും കോടതി വ്യക്തമാക്കി.
1993ല് മുംബൈ നഗരത്തെ നടുക്കിയ സ്ഫോടനപരമ്പരയില് 257 പേരാണ് മരിച്ചത്. സ്ഫോടനത്തിന് പിറകില് പ്രവര്ത്തിച്ച ദാവൂദ് ഇബ്രാഹിമും യാക്കൂബിന്റെ സഹോദരന്മാരായ ടൈഗര് മേമനും പാകിസ്താനില് ഒളിവില് കഴിയുന്നതായി സംശയിക്കുന്നു. 2013 മാര്ച്ച് 13നാണ് സുപ്രീംകോടതി മേമന് വധശിക്ഷ നല്കിയത്. കഴിഞ്ഞ കൊല്ലം ജൂണില് ഇത് സ്റ്റേ ചെയ്ത സുപ്രീം കോടതി, തുറന്ന കോടതിയില് വാദം കേള്ക്കാന് മൂന്നംഗ ബെഞ്ചിന് വിടുകയായിരുന്നു. റിവ്യൂ ഹര്ജി ഇക്കൊല്ലം ഏപ്രില് ഒമ്പതിന് തള്ളി. തുടര്ന്ന് ഏപ്രില് 30ന് മഹാരാഷ്ട്രയിലെ 'ടാഡാ' കോടതി മരണ വാറണ്ട് പുറപ്പെടുവിക്കുകയായിരുന്നു. ജൂലായ് 17ന് ഈ വിവരം മേമനെ അറിയിച്ചു. ഇതിനിടയില് മെയ് 12ന് മേമന് തിരുത്തല് ഹര്ജിയുമായി സുപ്രീം കോടതിയിലെത്തുകയായിരുന്നു.
டாக்டர் அப்துல் கலாம் விஞ்ஞானி,குடியரசு தலைவர்,ஆசிரியர், குழந்தைகள் பிரியர் என பல்வேறு பதவிகளை வகித்தாலும் அவர் ஒரு சிறந்த கவிஞர் என்றால் அது மிகையாகாது. அவர் எழுதிய பாடலை உஷா உதூப் பாடியுள்ளார்.
டாக்டர் அப்துல்கலாமின் ஆசை ஓவ்வொரு மனிதனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாகும். ஒற்றுமையுடன் வாழ்ந்தால் வளமையான அமைதியான தேசத்தை உருவாக்கலாம் என்பது அவரது ஆசை என்று கூறலாம்.
பாடல் வரியில் அவர் ஏழுதியது என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் அன்பும் அமைதியும் பரவ வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று கூறியுள்ளார்.

Visakhapatnam NATURAL PORT. EASTERN COAST OF INDIA.
9. Visakhapatnam
source: wikimedia.org
Vizag has some of the largest ports in the country.
HolidayIQ Traveller SK Sinha says, “Visakhapatnam is considered a centre for education in Andhra Pradesh. Visakhapatnam has one of the country's largest ports and its oldest shipyard. It has the only natural harbour on the eastern coast of India. As the city is located on the Bay of Bengal, the humidity remains high throughout the year. The months from November to February are the best times to visit the city.”
UDAIPUR OF INDIA. Udaipur is full of history and has stories of battles of ancient times. Covers the lifestyles of Maharajas.
20. Udaipur
source: wikimedia.org
HolidayIQ Traveller Parth says, “Udaipur is a small and heritage city. Palaces are real good with scenic view. Location spots are closer and most of the points can be covered in single day. Don't miss rope way and City Palace.Udaipur is full of history and has stories of battles of ancient times. Covers the lifestyles of Maharajas.”
How to reach | Where to stay
11357 Ratings | 6519 Reviews | 212 Sightseeings | 740 Photos
Wednesday, July 29, 2015
சொந்த மண்ணில் அப்துல் கலாம் உடல் தலைவர்கள்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி
சொந்த மண்ணில் அப்துல் கலாம் உடல் தலைவர்கள்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி
மாற்றம் செய்த நாள்:
புதன், ஜூலை 29,2015, 4:30 PM IST
பதிவு செய்த நாள்:
புதன், ஜூலை 29,2015, 4:30 PM IST
ராம்நாதபுரம்
மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலுக்கு ராமேசுவரத்தில் இன்று பொதுமக்கள் கண்ணீர் மல்க, மலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நாளை (வியாழக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி யான அப்துல்கலாம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு அப்துல் கலாம் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரவு வரை அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாமின் இறுதி சடங்கை ராமேசுவரத்தில் நடத்த வேண்டுமென அவரது உறவினர்கள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்றதை தொடர்ந்து இன்று கலாம் உடல் ராமேசுவரம் கொண்டு வரப்பட்டது. காலை 8-15 மணிக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ராணுவ மரியாதையுடன் எடுத்து வரப்பட்ட கலாம் உடல் தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பகல் 12.30 மணிக்கு வந்தது. அவரது உடலை தமிழக அரசு சார்பில் கவர்னர் ரோசய்யா, தலைமை செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் பெற்று கொண்டனர். விமான நிலைத்தில் திரளான மக்கள் குவிந்துள்ளனர்.
விமான நிலையத்தில் கவர்னர் ரோசய்யா, தலைமை செயலாளர் ஞான தேசிகன், மேகலாய கவர்னர் சண்முக நாதன், தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அபய் குமார்சிங், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர குமார் யாதவ், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி, மாநகராட்சி ஆணை யாளர் கதிரவன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அப்துல் கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அப்துல்கலாம் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியதும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மணடபம கேம்ப் மைதானத்தில் அப்துல் கலாம் உடல் கொண்டு செல்லபட்டதும் தமிழக அரசின் சார்பாகவும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (நிதி மற்றும் பொதுப்பணித்துறை), அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் (மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை), அமைச்சர் எடப்பாடி கே. பழனிசுவாமி (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் மற்றும் வனத் துறை), அமைச்சர் பி.பழனி யப்பன் (உயர்கல்வித் துறை), அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை), அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (வருவாய் துறை) ஆகியோர் அஞ்சலில் செலுத்தினர்.
அங்கிருந்து ஊர்வலமாக ராணுவ வாகன்ம் மூஅல்ம் அப்துல்கலாம் உடல் ராமேசுவரம் செல்கிறது.அவர உடல் எடுத்து செல்லப்படும் வழி நெடுகிலும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கூடி நின்றனர்.
ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே உள்ள கிழக்காடு பள்ளித் திடலில் கலாம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிகர், வெங்கயா நாயுடு, பொன் ராதா கிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,நத்தம் இரா.விசுவநாதன் ஆர். வைத்திலிங்கம்,எடப்பாடி கே. பழனிசுவாமி,பி.பழனியப்பன், எஸ்.சுந்தரராஜ்,,ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் அஞ்சலில் செலுத்தினர்.
தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர், தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின், தமிழக பார்தீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் , ம.தி.மு.க
பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஆயிர கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

‘செரிபரல் பால்சி’ எனப்படும் ‘நிரந்தர வகை முடக்கு நோய்’ குழந்தைகளை பாதிக்கிறது. இந்த அரிய வகை நோயால்
மகனே...வா...செரிபரல் பால்சியால் முடக்கப்பட்ட போதும், விடாமுயற்சியுடன் ஓடி ஜெயித்த மகனை கட்டித்தழுவும் தந்தை
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 28, 6:40 AM IST
லண்டன், ஜூலை 28-
உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்களில் ஏற்படும் அபரிமிதமான வளர்ச்சி அல்லது பாதிப்பின் காரணமாக ‘செரிபரல் பால்சி’ எனப்படும் ‘நிரந்தர வகை முடக்கு நோய்’ குழந்தைகளை பாதிக்கிறது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வளரும் நிலையில், உரிய காலத்தில் நடக்க முடியாமை, பேச முடியாமை அல்லது தாமதமாக பேசுதல், நரம்பு மண்டல பாதிப்புகள், தசை இறுக்க நோயால் சிரமப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்நோய் பற்றிய விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3-ம் தேதி சர்வதேச செரிபரல் பால்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து 3 போட்டிகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ‘டிரையத்லான்’ என்ற தொடர் போட்டி குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். சாதாரண மனிதர்கள் விளையாடுவதற்கே கடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய இந்தப் போட்டியில் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டால் எப்படியிருக்கும்?.
செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தானே ஐயோ பாவம் என்று பார்க்காமல், 100 மீட்டர் நீச்சல், 4 கி.மீ மிதிவண்டி பயணம், 1.3 கி.மீ ஓட்டம் என்று, கடினமான போராட்டத்துடன் தாங்கள் ஒன்றும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணர்த்தி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்தப் போட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நாட்டிங்காம்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த 8 வயது சிறுவனான பெய்லி மேத்யூஸ், வடக்கு யார்க்ஷைர் கவுண்டியில் நடந்த சேஸ்டில் ஹோவார்ட் டிரையத்லான் போட்டியில் பங்கேற்றான்.
இந்த இடத்தில் ஒரு சின்ன ப்ளாஷ் பேக்:
பெய்லி 18 மாதக் குழந்தையாக இருந்த போதுதான், அவனுக்கு இந்த வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அவனை எக்காரணம் கொண்டும் ஒதுக்க விரும்பாத தாய் ஜூலியும் தந்தை ஜொனாதன் மேத்யூசும் இயல்பாகவுள்ள தங்களின் மூத்தமகனைப் போலவே அவனையும் வளர்க்க நினைத்தனர்.
அதிலும் ஜொனாதன் ஒவ்வொரு வாரமும் பார்க் ரன் என்ற 5 கி.மீ-ல் தூரத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியில் அவனைப் பங்கேற்க வைத்தார். பெய்லிக்கு தன்னம்பிக்க்கை வந்தது. உடனே ஜொனாதன்(47) அவனுக்கு வாக்கிங் ப்ரேம் (நடக்க முடியாத குழந்தைகளுக்கான வாக்கிங் ஸ்டிக் போன்ற கருவி) ஒன்றை வாங்கி கொடுத்தார். அதன் உதவியுடன் பெய்லி, சகஜமாக நடக்கத் தொடங்கிய போது ஜொனாதனுக்கு கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
இந்நிலையில், சமீபத்தில் நம்ம குட்டி ஹீரோ பெய்லி, ‘ட்ரையத்லான்’ போட்டியில் நான் பங்கு பெறப் போகிறேன் என்று திக்கி திக்கி சொன்னபோது, ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தாலும், மகன் எப்படி இவ்வளவு கடினமான போட்டியை சமாளிக்கப் போகிறானோ என்று ஜொனாதனுக்கு உள்ளூர ஒரு நடுக்கமும் இருந்தது. காரணம் போட்டியின் கடைசிக்கட்டத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ‘வாக்கிங் பிரேம்’ இல்லாமல் ஓட வேண்டும். ஒரு வேளை என் மகன் அப்போது நிலைகுலைந்து அவமானமடைந்துவிட்டால்.???
ஆனால் பெய்லியோ அவனைப் போன்றவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட மிதிவண்டிகை வாங்கி மிதிவண்டி ஓட்டும் பயிற்சி செய்தான், உள்ளூர் ஏரி ஒன்றிற்குச் சென்று நீச்சல் பயிற்சியும் செய்தான். போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நாளும் வந்தது.
போட்டியில் சிறப்பாக அனைத்து தடைகளையும் கடந்த பெய்லி தன் வாக்கிங் பிரேமை வைத்து விட்டு ஓடி வர வேண்டிய கட்டத்தில் அங்கு கூடியிருந்த நூற்றுக் கணக்கான் பார்வையாளர்கள் அவனை உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்டேடியமே அதிரும் அளவிற்கு ஆர்ப்பரித்தனர்.
இலக்கைக் கடந்து, வெற்றி வாகை சூடி வந்த தன் மகனை அவனது தந்தை கட்டித்தழுவி முத்தமிட்ட தருணம்.. முடியல.....கண்ணு கலங்கிடுச்சு........

Subscribe to:
Posts (Atom)