கன்னியாகுமரி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசி பெருமாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது அவர், திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர். இதனால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். ஆனால், அதிகாரிகள் அளித்த உறுதிமொழிபடி டாஸ்மாக் கடை
No comments:
Post a Comment