மகனே...வா...செரிபரல் பால்சியால் முடக்கப்பட்ட போதும், விடாமுயற்சியுடன் ஓடி ஜெயித்த மகனை கட்டித்தழுவும் தந்தை
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 28, 6:40 AM IST
லண்டன், ஜூலை 28-
உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்களில் ஏற்படும் அபரிமிதமான வளர்ச்சி அல்லது பாதிப்பின் காரணமாக ‘செரிபரல் பால்சி’ எனப்படும் ‘நிரந்தர வகை முடக்கு நோய்’ குழந்தைகளை பாதிக்கிறது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வளரும் நிலையில், உரிய காலத்தில் நடக்க முடியாமை, பேச முடியாமை அல்லது தாமதமாக பேசுதல், நரம்பு மண்டல பாதிப்புகள், தசை இறுக்க நோயால் சிரமப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்நோய் பற்றிய விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3-ம் தேதி சர்வதேச செரிபரல் பால்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து 3 போட்டிகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ‘டிரையத்லான்’ என்ற தொடர் போட்டி குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். சாதாரண மனிதர்கள் விளையாடுவதற்கே கடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய இந்தப் போட்டியில் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டால் எப்படியிருக்கும்?.
செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தானே ஐயோ பாவம் என்று பார்க்காமல், 100 மீட்டர் நீச்சல், 4 கி.மீ மிதிவண்டி பயணம், 1.3 கி.மீ ஓட்டம் என்று, கடினமான போராட்டத்துடன் தாங்கள் ஒன்றும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணர்த்தி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்தப் போட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நாட்டிங்காம்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த 8 வயது சிறுவனான பெய்லி மேத்யூஸ், வடக்கு யார்க்ஷைர் கவுண்டியில் நடந்த சேஸ்டில் ஹோவார்ட் டிரையத்லான் போட்டியில் பங்கேற்றான்.
இந்த இடத்தில் ஒரு சின்ன ப்ளாஷ் பேக்:
பெய்லி 18 மாதக் குழந்தையாக இருந்த போதுதான், அவனுக்கு இந்த வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அவனை எக்காரணம் கொண்டும் ஒதுக்க விரும்பாத தாய் ஜூலியும் தந்தை ஜொனாதன் மேத்யூசும் இயல்பாகவுள்ள தங்களின் மூத்தமகனைப் போலவே அவனையும் வளர்க்க நினைத்தனர்.
அதிலும் ஜொனாதன் ஒவ்வொரு வாரமும் பார்க் ரன் என்ற 5 கி.மீ-ல் தூரத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியில் அவனைப் பங்கேற்க வைத்தார். பெய்லிக்கு தன்னம்பிக்க்கை வந்தது. உடனே ஜொனாதன்(47) அவனுக்கு வாக்கிங் ப்ரேம் (நடக்க முடியாத குழந்தைகளுக்கான வாக்கிங் ஸ்டிக் போன்ற கருவி) ஒன்றை வாங்கி கொடுத்தார். அதன் உதவியுடன் பெய்லி, சகஜமாக நடக்கத் தொடங்கிய போது ஜொனாதனுக்கு கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
இந்நிலையில், சமீபத்தில் நம்ம குட்டி ஹீரோ பெய்லி, ‘ட்ரையத்லான்’ போட்டியில் நான் பங்கு பெறப் போகிறேன் என்று திக்கி திக்கி சொன்னபோது, ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தாலும், மகன் எப்படி இவ்வளவு கடினமான போட்டியை சமாளிக்கப் போகிறானோ என்று ஜொனாதனுக்கு உள்ளூர ஒரு நடுக்கமும் இருந்தது. காரணம் போட்டியின் கடைசிக்கட்டத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ‘வாக்கிங் பிரேம்’ இல்லாமல் ஓட வேண்டும். ஒரு வேளை என் மகன் அப்போது நிலைகுலைந்து அவமானமடைந்துவிட்டால்.???
ஆனால் பெய்லியோ அவனைப் போன்றவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட மிதிவண்டிகை வாங்கி மிதிவண்டி ஓட்டும் பயிற்சி செய்தான், உள்ளூர் ஏரி ஒன்றிற்குச் சென்று நீச்சல் பயிற்சியும் செய்தான். போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நாளும் வந்தது.
போட்டியில் சிறப்பாக அனைத்து தடைகளையும் கடந்த பெய்லி தன் வாக்கிங் பிரேமை வைத்து விட்டு ஓடி வர வேண்டிய கட்டத்தில் அங்கு கூடியிருந்த நூற்றுக் கணக்கான் பார்வையாளர்கள் அவனை உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்டேடியமே அதிரும் அளவிற்கு ஆர்ப்பரித்தனர்.
இலக்கைக் கடந்து, வெற்றி வாகை சூடி வந்த தன் மகனை அவனது தந்தை கட்டித்தழுவி முத்தமிட்ட தருணம்.. முடியல.....கண்ணு கலங்கிடுச்சு........

No comments:
Post a Comment