Wednesday, September 9, 2015

கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம்

கொய்யா
கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

No comments:

Post a Comment