Sunday, September 6, 2015

PEPTIC ULCER DISEASE.





வயிற்றில் புண் ஏற்பட என்ன காரணம்? இதோ தீர்வு தரும் டிப்ஸ்!

உணவு பழக்கவழக்கங்களை சரியான முறையில் பின்பற்றாமல் இருப்பது, ஸ்லிம்மாக வேண்டும் என்ற ஆசையில் பட்டினி கிடப்பது போன்றவர்களை ஆட்டிப்படைக்கிறது இந்த வயிற்றுப்புண்(Ulcer).
குடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு நாள்பட்ட, எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு சிதைந்து விடும்.
அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். வயிற்றில் ஓட்டை ஏற்பட்டு புண்கள் உருவாகும்.
காரணம் என்ன?
பதற்றம், கவலை, பொறாமை, காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்களை உண்டாக்கும்.
வயிற்றில் புண்களை தோற்றுவிக்கும் இன்னொரு முக்கிய காரணம் Helicobacterpylori (ஹெலிகோபேக்டர் பைலோரி) என்ற ஒரு வகை பாக்டீரியா.
இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுகிறது. வயிற்றில் அமிலத்தை நீர்க்க வைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்கி, நாளடைவில் இந்த வீக்கம் புண்ணாக மாற இந்த எச்.பைலோரி கிருமிகள் உதவுகின்றன.

எப்படி தடுக்கலாம்?
அதிக அளவு மது அருந்துதல், புகைபிடித்தல், தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது, அதிக டீ, காபி குடிப்பது. ஆஸ்பிரின் போன்ற மருந்துகள்.
அதிக மனஅழுத்தம், பதற்றம், அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல். இவற்றை தவிர்த்தால், வயிற்றில் புண் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.
காரம் மற்றும் அசைவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உபயோகிப்பதை தவிர்க்கவும்.
பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.
இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.
சோற்று கற்றாழை சாறில் பச்சை பயறை ஊற வைத்து, காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.
http://tamilenkalmoossu.blogspot.in/

No comments:

Post a Comment