சேலம் முள்வாடி பகுதியில் மக்களுக்கு சொந்தமான, அவர்கள் வசித்து வரும் நிலத்தை எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மேம்பாலம் கட்டுமான பணிக்கு எடுக்க முயலும் மாநகராட்சியினை எதிர்த்து போராடிய சேலம் மக்கள் குழுவை சேர்த்த பியூஸ் மனுஷ், ஈசன் கார்த்திக் மற்றும் முத்து ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்:
1) நோட்டீஸ் கொடுத்து முறையாக நிலத்தை கையகப்படுத்திய பின்புதான் மேம்பால பணியினை தொடங்க வேண்டும்.
2) மேம்பால பணி நடைபெறும் காலத்தில் மக்கள் பயன்படுத்த தற்காலிக பாதை அமைத்து தர வேண்டும்.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய பியூஸ் மற்றும் தோழர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து பிணையில் கூட வர முடியாதபடி கைது செய்திருக்கும் சேலம் காவல்துறை மற்றும் சேலம் மாநகராட்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.
Environmental Activist - Piyush Manush
 
 
No comments:
Post a Comment