Monday, July 25, 2016

புதுக்கோட்டையின் பெருமைகளுள் இதுவரை யாரும் அறிந்திடாத ஒன்று! புதுக்கோட்டையின் பெயர் காரணம் தெரியுமா ??





I Love Pudukkottai with Jan Ram and 44 others.
புதுக்கோட்டையின் பெருமைகளுள் இதுவரை யாரும் அறிந்திடாத ஒன்று!
புதுக்கோட்டையின் பெயர் காரணம் தெரியுமா ??
உங்களை வியக்க வைக்கும் தகவல்!!
கண்டிப்பாக இதை படித்துவிட்டு SHARE செய்யவும்.
(புதுக்கோட்டையின் பெயர் காரணம் தெரியுமான்னு சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணிட்டோம்). இனிமே நம்ம மாவட்டத்தின் பெருமை பத்தி தான்.. படிங்க படிங்க..!
புதுக்கோட்டை என்றால் "புதிய கோட்டை" என்று பொருள்.
சங்க காலத்தில் சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக புதுக்கோட்டைப் பகுதி தமிழகத்தை ஆண்ட அனைத்து வம்ச மன்னர்களுக்கும் போர்க்களமாக விளங்கியுள்ளது. இன்றைய நிலையில் போர்க்களங்கள் அழிந்துவிட்டன! ஆனால் அவை கூறும் வரலாறு நமது முன்னோர்களின் வீரத்திற்கு வித்தாக உள்ளதை காண்கிறோம்!
தமிழகத்தில் பெருங்கற்கால நாகரிகம் குறித்து படித்தறிய சிறந்த மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். தமிழக நாகரீகக் கூறுகளை தெறிந்து கொள்ள புதுக்கோட்டை வரலாறு பெரிதும் உதவுமென்பதில் ஐயமில்லை.
அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், முத்தரையர், வேளீர், தொண்டைமான், வாணதிரையர், கொடும்புராயர் ஆகிய அனைத்து வம்சாவழிகளின் ஆட்சியையும் கண்டது இப்பகுதியாகும்.
இக்காலங்களை அடுத்து அண்மைக்காலம் (1948) வரை சுமார் 300 ஆண்டுகள் தனியரசாக விளங்கியதும் புதுக்கோட்டை ஒன்றே!
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் (திருமெய்யம்) வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவுமறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.மேலும் உலோகக்காலத்தின் பிற்பகுதியான இரும்புக்கால செம்பு, இரும்பு ஆயுதங்கள், மணிகள், அணிகலங்கள், இறந்தோரைப் புதைத்த புதைகுழிகள்,இறந்தோரின் நினைவுச் சின்னங்கள், கல்லறைகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் புதுக்கோட்டை சார்ந்த பகுதிகளில் கி.மு. 800க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்கால நாகரிகம் தழைத்திருந்தது எனக் கருதப்படுகிறது.
புதுக்கோட்டை அரசாட்சி ( 1947 ஆகஸ்ட்டு 15) வரை பிரிட்டீஷ் இந்திய ஆளுகைக்கு உட்படாத தனி நாடு.தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் ( இந்தியக் காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு அரசாக இருந்தவர்கள் .
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள்சொந்தமாக ஒரு நாணயத்தை வெளியிட்டுக்கொண்டார்கள்.அதன் பெயர் அம்மன் காசு.அதன் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால்தான் 'புதுக்கோட்டை அம்மன் காசு' என்ற பெயர். 'புதுக்கோட்டை அம்மன் சல்லி' என்றும் அழைப்பார்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம்.இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள். அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டுவந்தனர்.பிரகதாம்பாள்தாச என்றுதான் அவர்களுடைய விருதுகள் தொடங்கும்.
இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக "கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை" என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

No comments:

Post a Comment