Wednesday, July 29, 2015

சொந்த மண்ணில் அப்துல் கலாம் உடல் தலைவர்கள்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி

சொந்த மண்ணில் அப்துல் கலாம் உடல் தலைவர்கள்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
135
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
புதன், ஜூலை 29,2015, 4:30 PM IST
பதிவு செய்த நாள்:
புதன், ஜூலை 29,2015, 4:30 PM IST
ராம்நாதபுரம்

மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலுக்கு ராமேசுவரத்தில் இன்று பொதுமக்கள் கண்ணீர் மல்க, மலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நாளை (வியாழக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி யான அப்துல்கலாம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு அப்துல் கலாம் உடல்  கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரவு வரை அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாமின் இறுதி சடங்கை ராமேசுவரத்தில் நடத்த வேண்டுமென அவரது உறவினர்கள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்றதை தொடர்ந்து இன்று கலாம் உடல் ராமேசுவரம் கொண்டு வரப்பட்டது. காலை 8-15 மணிக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ராணுவ மரியாதையுடன் எடுத்து வரப்பட்ட கலாம் உடல் தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பகல் 12.30 மணிக்கு வந்தது. அவரது உடலை தமிழக அரசு சார்பில் கவர்னர் ரோசய்யா, தலைமை செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் பெற்று கொண்டனர்.  விமான நிலைத்தில் திரளான மக்கள் குவிந்துள்ளனர்.

விமான நிலையத்தில் கவர்னர் ரோசய்யா, தலைமை செயலாளர் ஞான தேசிகன், மேகலாய கவர்னர் சண்முக நாதன், தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அபய் குமார்சிங், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர குமார் யாதவ், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி, மாநகராட்சி ஆணை யாளர் கதிரவன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அப்துல் கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அப்துல்கலாம் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள்  அஞ்சலி செலுத்தியதும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மணடபம கேம்ப் மைதானத்தில் அப்துல் கலாம் உடல் கொண்டு செல்லபட்டதும்  தமிழக அரசின் சார்பாகவும்  அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (நிதி மற்றும் பொதுப்பணித்துறை), அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் (மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை), அமைச்சர் எடப்பாடி கே. பழனிசுவாமி  (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் மற்றும் வனத் துறை), அமைச்சர் பி.பழனி யப்பன் (உயர்கல்வித் துறை), அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை), அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார் (வருவாய் துறை) ஆகியோர் அஞ்சலில் செலுத்தினர்.

அங்கிருந்து ஊர்வலமாக ராணுவ வாகன்ம் மூஅல்ம் அப்துல்கலாம் உடல் ராமேசுவரம் செல்கிறது.அவர உடல் எடுத்து செல்லப்படும் வழி நெடுகிலும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கூடி நின்றனர்.

ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே உள்ள கிழக்காடு பள்ளித் திடலில் கலாம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிகர், வெங்கயா நாயுடு, பொன் ராதா கிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,நத்தம் இரா.விசுவநாதன் ஆர். வைத்திலிங்கம்,எடப்பாடி கே. பழனிசுவாமி,பி.பழனியப்பன், எஸ்.சுந்தரராஜ்,,ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் அஞ்சலில் செலுத்தினர்.

தொடர்ந்து  அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர், தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின், தமிழக பார்தீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் , ம.தி.மு.க
பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஆயிர கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment