Saturday, July 2, 2016

சொந்த ஊருக்கு எப்படி செல்வது? என்று யோசித்த கொலையாளி ராம்குமார்

                          



நெல்லை, 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து பல இடங்களிலும் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டான்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு எப்படி செல்வது? என்று யோசித்த கொலையாளி ராம்குமார் சாதுர்யமாக செயல்பட்டுள்ளார்.

இது குறித்து விவரம் வருமாறு:

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்து விட்டு ராம்குமார் தான் தங்கியிருந்த விடுதியில் 2 நாட்கள் இருந்துள்ளார். அதன்பின்னர் விடுதி அறையில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு போலீசாரின் கண்ணில் படாமல் சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

சொந்த ஊருக்கு எப்படி செல்வது? என்று யோசித்த ராம்குமார் பஸ்சில் ஊருக்கு வந்தால் போலீசிடம் சிக்கிக் கொள்வோம் என்று பயந்தார். எனவே கேரளா வழியாக கொல்லம் வந்து, பின்னர் அங்கிருந்து செங்கோட்டைக்கு வந்து விடலாம் என கணக்கு போட்டுள்ளார்.

எனவே சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்லத்துக்கு ரெயில் டிக்கெட் எடுத்து ரெயிலில் கொல்லம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து புனலூர், செங்கோட்டை வழியாக பஸ்சில் சொந்த ஊருக்கு வந்தார்.

வீட்டில் இருந்து சுவாதி கொலை தொடர்பான விஷயங்களை கவனித்து வந்தார். தினமும் அனைத்து செய்தித்தாள்களையும் வாங்கி சுவாதி கொலை தொடர்பாக என்னென்ன தகவல்கள் இடம் பெற்றுள்ளன? என்று படித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் ராம்குமாரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரது வீட்டில் சோதனையிட்டபோது சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்லத்துக்கு எடுக்கப்பட்ட ரெயில் டிக்கெட், அரசு விரைவு பஸ் டிக்கெட் மற்றும் சில துண்டு காகிதங்களை போலீசார் கைப்பற்றினார்கள். ராம்குமார் அறையில் செய்தித்தாள்களும் குவியலாக கிடந்தது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment