Tuesday, July 19, 2016

புதுக்கோட்டை ஊரு PUTHUKOTTAI NOT PUDUKKOTTAI.




புதுக்கோட்டை எங்க ஊரு with Thala Dheepan and 17 others.
March 20
புதுக்கோட்டை சில செய்திகள்....
ஆசியாவிலேயே மிகப்பெரிய அனந்த சயண பெருமாள் - திருமெய்யர்
உலகில் உள்ள அணைத்து நீர்நிலைகளின் பாவங்களை போக்குவது திருமயம் சத்திய புஷ்கரணி
உலகிலேயே சிவன் மற்றும் பெருமாளை ஒருங்கே கிரிவலம் வரும் ஊர் - திருமயம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரே திவ்ய தேசம் - திருமயம்
இமயமலையை விட அதிக சக்தி வாய்ந்தது திருமயம் மலைக்கோட்டை
உலகிலேயே வடக்கு திசை பார்த்து தனி சன்னதியில் வீற்றிருக்கும் பைரவர் - திருமயம் கோட்டை பைரவர்
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர் திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் லிங்கோத்பவர்
( பெரிய நந்திக்கு பின்புறம்).
ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை - புதுக்கோட்டை குலமங்களம் பெருங்கரையாடி மீட்ட அய்யணார் கோவில் குதிரை சிலை
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவன் சிலை - புதுக்கோட்டை கீரமங்களம்
தமிழத்திலேயே ஏழு சகோதரிகளாக (சப்தகன்னியர்களாக) அழைக்கப்படும்
1). திருவப்பூர் முத்துமாரியம்மன்
2). இளஞ்சாவூர் முத்துமாரியம்மன்
3). கொன்னையூர் முத்துமாரியம்மன்
4). நார்த்தாமலை முத்துமாரியம்மன்
5). கீரணிப்பட்டி முத்துமாரியம்மன்
6). கண்ணணூர் முத்துமாரியம்மன்
7). சமயபுரம் முத்துமாரியம்மன்
ஆகிய ஏழு முத்துமாரியம்மன்களில் நான்கு சகோதரிகள்
(திருவப்பூர், இளஞ்சாவூர், கொன்னையூர், நார்த்தாமலை)
வீற்றிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே.
தமிழ் நாட்டிலேயே சமணர்கள் அதிகமாக தங்கிய குகைகளும் மலைகளும் நிறைந்த மாவட்டம் புதுக்கோட்டை. (சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான்மலை)
இராஜராஜ சோழன் பதவி ஏற்றவுடன் முதல் கோவில் கட்டியது புதுக்கோட்டை நார்த்தாமலை அருகில்.
தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் இருப்பது புதுக்கோட்டை
தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அரசு அச்சகம் இருப்பது புதுக்கோட்டை.
தமிழகத்திலேயே நூற்றாண்டு கண்ட முதல் நகராட்சி புதுக்கோட்டை நகராட்சி.
ஹெலிகாப்டரில் புனித நீரும் பூக்களும் தூவி, அம்மன் கோவில் இராஜகோபுரம் கும்பாபிஷேகம் செய்தது கொத்தமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்டம்.
தனி நாணயம், தனி தபால் தலையுடன் விளங்கிய ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம்.
முதன்முதலில் கார் வாங்கியது புதுக்கோட்டை மன்னர்.
இந்தியாவின் முதல் பெண்மருத்துவர் DR.முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை.
பாரீஸ் மற்றும் பாண்டிச்சேரி நகருக்கு அடுத்தபடியாக அழகான நகர அமைப்பையும் நேர் வீதிகளையும் கொண்ட ஊர் புதுக்கோட்டை.

No comments:

Post a Comment