Saturday, July 9, 2016

ஆன்மீகதகவல்கள் Spiritual Informations April 1, 2015 at 10:38am 19.07.2016

                                          



பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக:-
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது
ஐதீகம்.
எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.
எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.
தோஷங்கள் போக்கும் பிரதோஷம் பூஜை:-
இறைவனின் கருனையால்
பிரதோஷம் தினம் அன்று 04.30 pm to 07.00 pm தமிழகத்தில் உள்ள சிவஆலயங்களுக்கு சென்று ஓம் நமசிவாய படிவம் வினியோகம் சேவை (எழுதி வாங்குவது) செய்கிறோம் இது ஆறு 6 வருடமாக 160 வது ஆலயங்களுக்கு மேல் நடைபெறுகிறது ஒவ்வொரு ஆலயத்திற்கும் கூரியர் மூலம் பிரதோஷம் படிவம் அனுப்பி வைக்கப்படுகிறது ஒவ்வொரு ஆலயத்திற்கும் 37, 54, 70, 108.216, 324, 504, 1008, 1350, 2500, இது போன்று ஒரு பிரதோஷத்திற்கு 25,000. படிவங்களுக்கும் மேல் பிரிண்டிங் செய்கிறோம். சங்ககிரி சென்னை காஞ்சிபுரம் வேலூர் அரக்கோணம் திருவண்ணாமலை திருச்சி திருச்செங்கோடு திருவாரூர் திருவையாறு தஞ்சாவூர் கும்பகோணம் சிதம்பரம் விழுப்புரம் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி கரூர் பவானி ஈரோடு திண்டுக்கல் வாணியம்பாடி திருப்பத்தூர் மதுரை கோயம்புத்தூர் திருப்பூர் பொள்ளாச்சி உடுமலைபேட்டை
கன்னியாகுமரி ஓசூர் நாகபட்டினம் இது போன்று பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அடியேன் ஒவ்வொரு பிரதோஷம்மும் வெவ்வேறு ஆலயத்திற்கு சென்று அங்கு வரும் ஆன்மீக அன்பர்களுக்கு படிவம் எழுதி வாங்கியும் ருத்ராட்சம் (கழுத்தில் கட்டிவிடுவது) அணிவித்தும் இறைவனின் கருனையால் இச் சேவையை செய்து வருகிறேன்.
ஆகையால் நீங்களும் அருகில் இருக்கும் சிவஆலயத்திற்கு பிரதோஷ தினத்தன்று சென்று ஒவ்வொருவரும் நமது பாவங்களையும் தோஷங்களையும் போக்கிவிட்டு இறைவனின் கருனையையும் அருளையும் பெற்று ஆனந்தமான வாழ்வின் வழிசேருங்கள்.
»ஓம் நமசிவாய» »திருச்சிற்றம்பலம்»
குறிப்பு:- 122 பிரதோஷம் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை முக்தியே இறைவன் சிவபெருமானின் திருவடி.

No comments:

Post a Comment