Saturday, August 22, 2015


#இராபர்ட்_சிங்ளேயர்

மாற்தாண்டத்தின் சிற்பி

இராபர்ட் சிங்ளேயர் என்பவர் #ஸ்காட்லாந்துநாட்டிலுள்ள #கிளாஸ்கோ நகரில் 1883 நவம்பர் திங்கள் 15-ம் நாள் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் #ஜாண்_சிங்ளேயர். இவர் ஒரு கல் தச்சர். #இராபர்ட் இளைஞராக இருக்கும் போதே தந்தை #ஜாண் காலமானார். எனவே தனது 14 வயது முதல் 17 வயதுவரை தானே கொல்லப்பணியை செய்து அன்பு தாயையும் சகோதரர்களையும் கவனித்தார். சிறு பருவம் முதலே இறை பக்தியுடன் வளக்கப்பட்டபடியால் கொல்லப்பணி செய்து வரும்போதே #கம்ப்ஸ்லாங் ஆலையத்துடன் அதிக தொடர்பு வைத்திருந்தார். திருமறையில் நாட்டம் கொண்ட இவர் இரண்டு ஆண்டுகள் வேதபாட கல்வி கற்றார்.

இறை தொண்டுமீது ஆர்வம் கொண்டதால் அதற்க்கு தன்னை அற்ப்பணித்தார்.#தென்னிந்தியாவில் பணியாற்ற அழைப்பை பெற்ற இவர் #நாட்டிங்ஹாம் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.#லண்டன்_மிஷ்னரி_சங்கத்தில் சேர்ந்து தென் இந்தியாவுக்கு இறைபணியாற்ற வந்தார். 1909-ல் #நாகர்கோவில் அருள்திரு #ஜாண்_பார்க்கர்என்பவருக்கு உதவி ஊழியராக இருந்தார்.#எலிசபெத்_சிமித் அம்மையாரை அருள்திரு ஜாண் பார்க்கர் முன்னிலையில் 1910-ல் மணந்தார். பின் 1919-வரை நாகர்கோவிலில்குடும்பமாக பணியாற்றினார்.

#மாற்தாண்டம் வட்டார தலைமை பொறுப்பில் இருந்த #ஆக்கர் ஐயர் 1919-ல் ஓய்வு பெற்றார். இராபர்ட் சிங்ளேயர் அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.#மாற்த்தண்டம்_கிறிஸ்தவ_கல்லூரி (Nesamony Memorial christian college) அலுவலக கட்டிடத்தில் தங்கி இருபது ஆண்டுகள் சிறந்த பணியாற்றினார். #ஆக்கர்_அம்மையார்தொடங்கிய #தையல்_தொழிற்கூடம்பெரிதாக்கப்பட்டது.

#நேசமணி_நினைவு_கிறிஸ்தவ_கல்லூரியில் உள்ள பல கட்டிடங்கழும் LMS ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலை கட்டிடங்கழும் இவரது உழைப்பால் உருவானது.இவை அனைத்தும் 1920-1929 -க்குள் கட்டி முடிக்கப்பட்டது. 1932-ல்#தமிழ்_ஆசிரியர்_பயிற்சி_பள்ளியும்ஆரம்பிக்கப்பட்டது. 1933-ல் மாணவர்கள் தங்கி பயில மாணவர் விடுதி ஒன்றா நிறுவினார்.

ஆசிரியர் பயிற்சி கூடமும், தங்கும் விடுதியும் இன்று Nesamony Memorial Christian Collage -ன்#தாவரவியல் கட்டிடங்கள் ஆகும். கிறிஸ்தவ மக்களை #அடக்கம் செய்ய #கல்லறைதோட்டம் ஒன்றை Dr.#வில்லியம் அவர்களின் அன்பளிப்பால் அமைத்தார். இவர் ஒரு சிறந்த#சிற்பி_கலைஞர்_பொறியியல்_வல்லுனர்என்பதற்க்கு 1924- 1933-ல் அவரால் கட்டி முடிக்கப்பட்ட எழில் நிறைந்த#மாற்த்தாண்டம்_CSI_ஆலையம் ஓர் சான்றாகும். அதில் அமைக்கப்பட்ட#நாக்குமணி_3கடிகாரம் அவரது நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை இவர் கட்டிய இந்த ஆலையம் (CSI CHURCH Marthandam)#லண்டன்_மிஷ்னரி_சங்கத்தின்_நான்காவதுஆலையம் என்று தெரிகிறது.

இவரது மனைவியார் சித்திரத் தையல் தொழில் நிலையத்தை திறமையுடன் நடத்தி பெண்களிடையே நல்ல பணியாற்றினார். இவர்கழுக்கு #Dr_சிங்ளேயர் என்ற மகனும்#சிபில், #இசபெல் என்ற இரு பெண் பிள்ளைகழும் உண்டு.

இடைக்கால விடுப்புக்காக தாய் நாடு சென்றர். அவ்வேளையில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. எனவே இவரால் இந்தியா வர முடியவில்லை. அங்கேயே ஒரு ஆலையத்தின் போதகர் ஆனார்.

1946 செப்டம்பர் 12-ம் நாள் திடீர் என் மரித்து போனார். இவரது உலக வாழ்வு முடிந்து போனாலும் அவரது பணிகள் இன்றும் உயிருள்ள சாட்சியாக உள்ளன.அவரை காணமுடியாத இன்றைய சமுதாயத்துக்கு அவரால் கட்டப்பட்ட ஆலையம் 2 பாடசாலைகள் , தையல் கூடம், நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியின் பல கட்டிடங்கள், கல்லறை தோட்டம் இவைகள் அவரது தன்மைகளை வெளிக்காட்டுகின்றன.

— feeling wonderful with Nathira JubiJulie Jo,


No comments:

Post a Comment