Tuesday, August 18, 2015

நவக்கிரகங்கள் தங்களது ஜோடியுடன் இணைந்திருப்பது 'ஜோடி நவக்கிரகம்' என்று அழைக்கப்படும். இதை 'கல்யாண நவக்கிரகம்'

என்றும் கூறுவர். நவக்கிரகங்களும் அவர்களின் ஜோடியின் பெயரும் வருமாறு:-

சூரியன் - உஷா தேவி,

சந்திரன் - ரோஹிணி,

செவ்வாய் - சக்தி தேவி,

புதன் - ஞான தேவி,

வியாழன் - தாரா தேவி,

சுக்ரன் - சுகீர்த்தி,

சனி - நீலா,

ராகு - சிம்ஹி,

கேது - சந்திரலேகா.

காரைக்குடி அருகிலுள்ள மானகிரி, கீழச்சிவல்பட்டி அருகில் உள்ள ஆவினிப்பட்டி ஆகிய இடங்களில் கல்யாண நவக்கிரகம் எனப்படும்

ஜோடியாக நவக்கிரகங்கள் உள்ளன. இது போன்ற அமைப்பில் உள்ள நவக்கிரகத்தை தேர்ந்தெடுத்து வழிபட்டால் திருமணம் கைகூடும்.

திருவாரூர், வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு ஆகிய தலங்களில் ஒரே வரிசையில் உள்ள நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.

உட்கார்ந்த நிலையில் உள்ள நவக்கிரகங்கள் பிள்ளையார்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கைலாச நாதர் கோவிலில்

உள்ளது.

ஒரே கல்லில் ஒன்பது கிரகம் அமைந்துள்ள அமைப்பு கங்கை கொண்ட சோழபுரம் என்ற இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment